கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக, கம்மாபுரம், கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், வளையமாதேவி ஆகிய பகுதிகளில் என்எல்சி நிறுவனம் நிலங்களை கடந்த 2000 முதல் 2013 ஆம் ஆண்டு வரை கையகப்படுத்தியது.
இந்த நிலையில் 2000 ஆண்டு கையகப்படுத்திய விவசாயிகளுக்கு முறையான இழப்பீடு வழங்க கோரியும் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க கோரியும், பலமுறை போராட்டம் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர், நெய்வேலி மந்தாரக் குப்பத்தில் உள்ள என்எல்சி நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- நெய்வேலி செய்தியாளர் வீ.வினோதினி.
No comments:
Post a Comment