மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஆண்டு தோறும் அவர் இறை ஒளியோடு கலந்த நாளில் அவர் தாழிட்டு கொண்ட திருவறையை திறந்து ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதனைக் காண சன்மார்க்க அன்பர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வருகை தந்து திருவறை தரிசனத்தை கண்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் 153 வது சித்திவளாக திருவறை தரிசனத்தை முன்னிட்டு காலையில் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு புறப்பட்டு பார்வதிபுரம் கிராமத்தின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தை வந்தடைந்தது.இதன்பின்னர் .வள்ளலார் இறை ஒளியோடு கலந்த திருவறை திறக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
அப்பொழுது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற திருவருட்பாவைப்பாடி திருவறையை கண்டு தரிசித்துச் சென்றனர்.
No comments:
Post a Comment