தமிழகத்தில் தேவையில்லாத ஆணி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்; குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2024

தமிழகத்தில் தேவையில்லாத ஆணி அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்; குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அண்ணாமலை பேச்சு.


பிரதமர் நரேந்திரமோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச்செல்லும் நோக்கிலும், தமிழர்களின் எழுச்சிக்காகவும், ஊழலை அறவே ஒழிக்க வேண்டு என வலியுறுத்தி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடைப்பயணத்தை ஜூலை 28 தேதி ராமேஸ்வரத்தில்  தொடங்கினார். தொடர்ந்து  இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.அதன்படி இன்று 81 வது நாளாக கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் என் மண் என் மக்கள் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் பண்ருட்டியிலிருந்து நெய்வேலி வந்தடைந்த அண்ணாமலை நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் தொடங்கி ஆர்ச் கேட்டு வரையில் நடைப்பயணம் மேற்கொண்டு நெய்வேலி பகுதி மக்களை சந்தித்தார்.


அண்ணாமலையை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் அவரிடம் கைகுலுக்கி வரவேற்றனர், தொடர்ந்து சுமார் 8 மணி அளவில் குறிஞ்சிப்பாடி வந்தடைந்த அண்ணாமலை அங்கு பாஜக கடலூர் மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளர் எஸ் ஆர் பாலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து வாகனத்திலிருந்து இறங்கி குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியில் இருந்து குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் வரை நடைபயணமாக சென்றார் அப்பொழுது அங்கு திரண்டு இருந்த குறிஞ்சிப்பாடி பகுதி மக்கள்  அவரை பேண்ட் மற்றும் தப்பாட்டம் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர்.


பின்னர் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை பேசுகையில் குறிஞ்சிப்பாடி மக்கள் என்னை ஆர்வத்துடன் வரவேற்றனர் குறிஞ்சிப்பாடி நடைபயணம் மேற்கொண்ட பொழுது மூச்சு விட கூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் என்னை வரவேற்றது குறிஞ்சிப்பாடி தொகுதி மக்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களுக்கு முடிவுகட்டி விட்டதை உறுதி செய்கிறது எனவும் நரேந்திர மோடி அவர்கள் வேளாண் துறைக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் எனவும் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் வேளாண் துறைக்கு என்னென்ன திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் என புள்ளி விவரக் கணக்கோடு மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.


திருவண்ணாமலையில் விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தை கொடுக்க மாட்டேன் என்று போராடியவர்களை  குண்டர் சட்டத்தில் கைது செய்தது வேளாண் துறை அமைச்சரின் சாதனை என்று காட்டமாக பேசினார், மேலும் கடந்தாண்டி விட இந்த ஆண்டு நெல் கொள்முதல் 3 லட்சம் டன் வரை குறைந்துள்ளது. குறிஞ்சிப்பாடி மக்களை அடியாட்களை வைத்து மிரட்டி தனக்கு எதிராக யாரும் அரசியல் செய்ய விடாமல் தனது மகனை எம்பி ஆக்க முயற்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எனவும் குறிஞ்சிப்பாடி பகுதி பல வளர்ச்சிகளை அடைய வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு தங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கூறினார்.


தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு வெள்ளியால் செய்யப்பட்ட வேல் யை  பரிசாக  அளித்தனர். தொடர்ந்து பேசிய  மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இரண்டு பத்ம விபூஷன் அளிக்கப்பட்டுள்ளது பத்மபூஷன் விருது கேப்டன் விஜயகாந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.தொடர்ந்து வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க துடித்துக் கொண்டு இருக்கும் தமிழக அரசை விமர்சித்த அண்ணாமலை வடலூரில் சத்ய ஞான சபை உருவாக்க வள்ளலார் நினைத்தபோது பார்வதிபுரம் கிராம மக்கள் வழங்கிய 105 ஏக்கரில் தற்பொழுது 80 ஏக்கர் மட்டுமே சத்திய ஞான சபைக்கு வசம் உள்ளது மீதம் உள்ள இடம் அனைத்தும் ஆக்கிரமிப்புகளாக உள்ளது. வள்ளலார் சர்வதேச மையத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை திமுக அரசு மீட்டு அந்த 30 ஏக்கரில் திமுக அரசு அமைக்க முன்வர வேண்டும் என பேசினார்


மேலும் இளைஞர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசுகையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 622 இடங்களில் கொண்டாடப்பட்டுள்ளது, எனவும் இதற்கு பதிலாக வேளாண் துறை அமைச்சர் விவசாயிகளுக்கு ஏதாவது நல்ல திட்டங்களை செயல்படுத்திருக்கலாம் என பேசினார்.

No comments:

Post a Comment

*/