இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவி வித்யஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் தேசிய கொடிக்கு அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் மரியாதை செலுத்தி தேசிய கீதத்தை பாடி வணங்கினார்கள் பின்னர் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர், விழாவில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அன்னக்கிளி இளந்திரையன் வார்டு உறுப்பினர்கள், எஸ்எம்சி தலைவர், எஸ் எம் சி, உறுப்பினர்கள் கல்வியாளர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் என அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் குடியரசு தினம் பற்றியும் சுதந்திரத்திற்கு போராடிய தியாக தலைவர்களை பற்றியும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவர்களிடையே உரையாற்றினர், மேலும் நிகழ்ச்சியில் குடியரசு தின மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை போற்றும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான, பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பக் கலைகள், கவிதைப் போட்டி, ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகளின் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அன்னக்கிளி, இளந்திரையன் பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினர் நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் ஆசிரியர்கள் புவனேஸ்வரி, லதா , தீபா, சுஜாதா, செண்பகம், ரகுபதி ஆகியோர்கள் அனைவருக்கும் நன்றி கூறி இனிப்புகள் வழங்கினர்கள்.
- வீ.சக்திவேல், தமிழக குரல் கடலூர் மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment