சேத்தியாத்தோப்பு அருகே கார்ஒன்று பாலத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.போலீஸார்விசாரணை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 6 January 2024

சேத்தியாத்தோப்பு அருகே கார்ஒன்று பாலத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.போலீஸார்விசாரணை.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் மோதி கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. விழுப்புரத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்வதற்காக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரை ஜெரால்டு (57). S/O அற்புதராஜ், அக்ரி நகர், விழுப்புரம் என்பவர் ஓட்டி வர  இவரது மகள் ரஞ்சனா ( 21) காரின் உள்ளே அமர்ந்திருந்தார்.

அப்போது காரில் சென்றவர்களுக்கு சாலை வழித்தடம் சரியாக புரியாததால் குமாரக்குடி பகுதியில் உள்ள வளைவு பாலத்தில் சொகுசு கார் எதிர்பாராமல் திடீரென மோதியது. மோதியவுடன் சொகுசு காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் சாலையில் சென்றவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சியோடு தீப்பிடித்து எரியும் காரைப்பார்த்துக் கொண்டிருந்தனர்.


தீப்பிடித்த செய்தியறிந்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் காரில் பற்றியதீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் காரின் முன் பகுதி எரிந்து கருகியது. நல்வாய்ப்பாக காரில் வந்தவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி தப்பித்தனர். போலீசார் கார் தீப் பிடித்த சம்பவம் குறித்தும், காரில் வந்தவர்கள் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் பரபரப்பான போக்குவரத்து சாலையில் சொகுசு கார்  தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

No comments:

Post a Comment

*/