வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு அனைத்தும் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது, வீடுகளுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகள் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின் கட்டணம் செலுத்தி வரும் பயனாளிகள் தங்கள் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தை தவறான முறையில் கட்டுமான பணிக்கு செலுத்தப்படும் கட்டணங்களை செலுத்தாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் உபயோகித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு இதனை தடுக்க வேண்டிய மின்வாரிய அதிகாரிகள் பலமுறை புகார் எழுந்தும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதனை இயக்குதல் மற்றும் பராமரித்தல் மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இப்பகுதியில் மின்வாரிய அதிகாரிகளால் மாதம்தோறும் நடத்தப்படும் மின் திருட்டை தடுக்கும் வெகுஜன சோதனை (mass raid) நடைபெறவில்லையா? அல்லது அப்பகுதியில் பணி மேற்கொண்டு வரும் மின் ஊழியர் மற்றும் அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு இதனை கண்டு கொள்ளவில்லையா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனவே தமிழ்நாடு மின்சார வாரியம் இதன் மீது கவனம் கூர்ந்து தவறான முறையில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை கட்டிடப் பணிக்கு பயன்படுத்தி வரும் நபர்கள் மீதும் மின் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment