கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ரயில்வே கேட்டு அருகே சென்மேரி தனியார் பள்ளி உள்ளது, இப்பள்ளியில் தமிழர் திருநாளாம் தை திருநாளை வரவேற்கும் விதமாக பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளான உறியடித்தல் கயிறு இழுத்தல் ஆகியவை நடைபெற்றது, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து புது பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்ற கோஷத்துடன் உற்சாகமாக தைத்திருநாளை வரவேற்றனர், போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment