கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆயிப்பேட்டை கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் நொண்டி வீரன்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் அன்று பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆயிப்பேட்டை கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களுமே கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து நொண்டி வீரனுக்கு படையல் செய்து தங்களது வேண்டுதலையும் நேர்த்திக்கடனையும் நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த விழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் பாரம்பரியம் மாறாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெருமையாக குறிப்பிடும் கிராம மக்கள், இந்தப்பொங்கல் விழா வழிபாட்டின் மூலம் தங்கள் கிராமத்தின் ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை எப்போதும் வற்றாமல் இருந்து வருவதாக பெருமிதமாக தெரிவித்தனர். இந்தக் கிராமத்திலிருந்து வெளியூருக்கு திருமணம் செய்து சென்றவர்கள் மற்றும் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டவர்கள் என ஆண்கள், பெண்கள், பெரியவர்கள் சிறுவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருமே பங்கேற்று பாரம்பரியம் மாறாமல் வழிபட்டு வருவதுஇந்த கிராமத்தினரின் ஒற்றுமையை அனைவருக்கும் பறைசாற்றுவதாகவும், மற்றவர்களுக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகவும் இருந்தது.
No comments:
Post a Comment