அதனால் தான் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அதன் பழமை அடையாளம் மாறாமல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சந்தையானது சிறப்பு சந்தையாகும். வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் போகிச் சந்தையாக நடைபெறுகிறது. இதில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான மஞ்சள் கொத்து, பூக்கள், பழங்கள், கரும்புகள், இல்லங்களையும் வாசல்களையும் அலங்கரிக்கும் கலர் கோலமாவுகள் மற்றும் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்திற்கான நெட்டித்தக்கையில் செய்யும் மாலைகள், பசுமையான காய்கறிகள் என பலதரப்பட்ட பொருட்களின் மொத்த சந்தையாக இது நடைபெறுகிறது. இங்கு மளிகைப் பொருட்களும் கருவாடு போன்ற கடல் உணவுகளும் என ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான அத்தனை பொருட்களுமே இங்கு கிடைப்பதால் இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய சந்தையில் வியாபாரம் களைகட்டியது. இங்கு இப்பகுதியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் என பல தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர். அதனால் சந்தையில் விற்பனையாகும் பொருட்கள் தரமாகவும், சுத்தமாகவும், விலை கிராம மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்பவும் இருந்து வருகிறது.
No comments:
Post a Comment