இந்நிகழ்ச்சியினை கழக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ். திமுக மாவட்ட பிரதிநிதி சங்கர். நகர செயலாளர் முனவர் உசேன். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்.பரங்கிப்பேட்டை வர்த்தக தொழில் சங்கம் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ். இணைச்செயலாளர் கவிமதி.கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கலீல் மற்றும் கழக நிர்வாகிகள். கழக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர்.
மேலும் கோலம் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு முதல் பரிசாக டேபிள் டாப் கிரைண்டர். இரண்டாம் பரிசாக மிக்ஸி. மூன்றாம் பரிசாக டேபிள் ஃபேன் வழங்கப்பட்டது மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவில் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
செய்தியாளர் சாதிக் அலி

No comments:
Post a Comment