அதன்படி சிறுவர்கள், இளைஞர்கள், ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறகுப்பந்து போட்டியும், சதுரங்க விளையாட்டு, கேரம் போர்டு, பந்தால் கல்லை அடித்து விழவைக்கும் போட்டி, ஸ்பூனில் எலுமிச்சம்பழம் வைத்து கீழே விழாமல் நடந்து செல்லும் போட்டி, பலூனை வாயால் ஊதி வெடிக்க வைக்கும் போட்டி, கயிற்றில் முறுக்கைக் கட்டி தொங்கவிட்டு வாயினால் தாவிக் கடித்து உண்ணும் போட்டி, சிலம்பப் போட்டி,வாத்து போல் நடந்து செல்லும் போட்டி, ரூபிக் க்யூபில் ஒரே நிறங்களை ஒன்று சேர்க்கும் போட்டி, மற்றும் உறியடிப் போட்டி, ஆடல், பாடல், இசை நாற்காலி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, பரதம்,பேச்சுப்போட்டி இப்படி பல்வகை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் எனபலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டுப் போட்டிகளில்கலந்து கொண்டு முதல், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு இறகுப்பந்து மட்டைகள், ஸ்கூல்பை,கள் போன்ற பரிசுகளும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் உயர்தர ஸ்டீல் வாட்டர் பாட்டில்கள், எவர்சில்வர் டப்பாக்கள் போன்றஆறுதல் பரிசுகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களால் வழங்கப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளை ஐயாஅப்துல்கலாம் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு கழக நிர்வாகிகள் G.பாலமுருகன் தலைவர், R.கோபிநாதன் பொதுச்செயலாளர், T.அருள் ஞானப்பிரகாசம் பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள். S.பாலமுருகன், S.சரவணன், B.கற்பகவள்ளி, A.இளவரசி யுதன்பிரகாஷ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினார்கள். விளையாட்டுப் போட்டிகளை கிராம மக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி கண்டு களித்தனர்.

No comments:
Post a Comment