நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், வருகின்ற 26- ஆம் தேதி, குடும்பத்துடன் மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2024

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், வருகின்ற 26- ஆம் தேதி, குடும்பத்துடன் மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவிப்பு.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கத்தின் மூலம், பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.  அவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழக மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில், வீடு,  நிலம் கொடுத்து பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், சொசைட்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு தினத்தன்று என்எல்சி தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன், முற்றுகையிட போவதாக என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

மேலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து,  வருகின்ற குடியரசு தினத்தன்று, வேலை நிறுத்த போராட்டத்தை பற்றி தேதியை அறிவிக்கப்பட உள்ளதாகவும்,  வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 


இதுகுறித்து நெய்வேலி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர் அளித்துள்ள பேட்டியில், எல்லோருக்கும் விடுதலை கிடைத்து விட்டதாகவும், ஆனால் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விடுதலை கிடைக்கவில்லை எனவும், நீதிமன்ற தீர்ப்பை, என்.எல்.சி நிர்வாகம் நிறைவேற்ற மறுப்பதால்,  போராட்டக் குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 


ஏற்கனவே கடந்த வருடத்தில், நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது, என்.எல்.சி சுரங்கப் பகுதிகளில்,  போதிய பராமரிப்பு இல்லாமலும், ஆட்கள் பற்றாக்குறையால் பல்வேறு விபத்துகள் அரங்கேரிய நிலையில், மீண்டும் வருகின்ற ஜனவரி 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படுவதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதால், கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்எல்சி இந்திய நிறுவனம் சுதாரித்துக் கொண்டு, உரிய பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளதாக நெய்வேலி பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 


- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062

No comments:

Post a Comment

*/