போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பலக்கட்ட போராட்டம் நடத்தினர். இதில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி, பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வடலூர் பணிமனை மொத்தம் உள்ள 43 பேருந்துகளில் ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் நகரப் பேருந்துகளில் ஒரு சில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டது மீதமுள்ள பேருந்துகள் வடலூர் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது
மேலும் வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் தினசரி அட்டவணைப்படி இயக்கப்படாமல் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் நீண்ட பயணம் மேற்கொள்ளும் பயணிகள் வடலூர் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர், சில பேருந்துகள் நிரந்தர தொழிலாளர்கள் மூலம் இயக்கப்படாமல் வெளி ஆட்கள் மூலம் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு அனுபவம் இல்லாத ஓட்டுநர்களை வைத்து இயக்கும் பேருந்தால் விபத்துகள் ஏற்படும் எனக்கூறி தொழிற்சங்கத்தினர் வடலூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களுக்கு கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment