குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2024

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் சுமார் 10 இருக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகின்றனர், களிமண்ணினால் செய்யப்படும் மண்பானை திருஷ்டி பொம்மைகள், மண் சட்டிகள்,மண் பொம்மைகள் ஆகியவற்றை தலைமுறை தலைமுறையாக தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை செய்யும் பணியை தற்பொழுது தீவிரமாக தொடங்கியுள்ளனர் பானை ரகங்களில் சிறிய வகை முதல் பெரிய வகை வரை தற்பொழுது செய்து வருகின்றனர், சிறிய வகை பானை ரூபாய் 50 ரூபாய் முதல் பெரிய வகையிலான பானை சுமார் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்து வருகின்றனர்.


சாலையோரங்களில் வீடுகளில் விற்பனை செய்யப்பட்டும் வரும் மண் பானைகளை அவ்வழியே செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

No comments:

Post a Comment

*/