கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே தர்மநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காத்திருப்போர் கூடம் வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய காத்திருப்போர் கூடம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற அதன் திறப்பு விழாவில் கம்மாபுரம் அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் மருதை முனுசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் ,புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் பங்கேற்று புதிய காத்திருப்போர் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment