கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட நெய்வேலி நகரம், நெய்வேலி தெர்மல், ஊமங்கலம், மந்தாரக்குப்பம் ,வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி மற்றும் நெய்வேலி மகளிர் காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் உள்ளது இந்நிலையில் நெய்வேலி சரக காவல் துணை கண்காணிப்பாளராக ராஜ்குமார் அவர்கள் பணி மேற்கொண்டு வந்தார்.
பணியிட மாறுதல் காரணமாக தற்பொழுது புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பண்ருட்டி காவல் சரகத்தில் பணிபுரிந்த சபியுல்லா அவர்கள் இன்று நெய்வேலி காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார் அவரை சந்தித்த காவல் ஆய்வாளர்கள் காவல்துறையினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி.
No comments:
Post a Comment