கடலூர் மாவட்ம் சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் நெல் வயல்களில் மழை நீர் தொடர்ந்து தேங்கி நின்றதால் நெல் பயிர்கள் அழுகி முளைக்க ஆரம்பித்து விட்டன. இருந்தாலும் எப்படியாவது சேதம் அடைந்து வரும் நெல் பயிரினை காப்பாற்ற விவசாயிகள் வாடகை பம்ப்செட் வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதுவரை அதிகாரிகள் யாரும் வந்துபார்க்கவில்லை. கணக்கெடுப்பும் செய்யவில்லை.
வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு தூர்வாராமல் போனதால், சேதமடைந்த நெல்பயிர் முளைத்துவிட்டதாலும் கடைசிக்கட்ட முயற்சியாக ஒருநாளுக்கு ஆயிரம் ரூபாய் என்ற வாடகையில் டீசல் பம்ப்செட் வைத்து தேங்கிய மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சேதம் அடைந்த நெல்லை கொண்டு செல்லும் போது நிபந்தனைகள் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உடனடியாக வடிகால் வாய்க்காலை தூர்வாரித் தர வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment