கத்தாழை கிராமத்தில் என்எல்சி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 January 2024

கத்தாழை கிராமத்தில் என்எல்சி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.


கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை கிராமம் உள்ளது. இங்குள்ள கரைமேடு, மும்முடி சோழகன், கத்தாழை ஆகிய கிராமங்களில் என்எல்சி நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக விளை நிலத்தை 2000ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது. 

இன்னமும் அவர்களுக்கு முழுமையான இழப்பீடு வாழ்வாதாரத் தொகை,  வழங்கவில்லை எனவும் கையகப்படுத்தும் இடத்தில் உள்ள கிராமப் பகுதி இளைஞர்களுக்கு சுரங்கப் பணிகளுக்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுஇன்னமும்வேலை வழங்கவில்லை. இந்த நிலையில் தற்போது கிராமத்தின் அருகே இரண்டாவது சுரங்கத்தில் இருந்து என்எல்சி நிர்வாகம்  போக்குவரத்துக்கான அகலமான சாலை அமைத்து வருகிறது. முழுமையான இழுப்பிடு வழங்க வேண்டும், என்எல்சியில் வேலைக்காக வழங்கப்பட்ட பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும், வாழ்வாதாரத் தொகை வழங்க வேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை அமைக்கும் பணியை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தினர். 


பிறகு அங்குவந்த என்எல்சி அதிகாரிகள் உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றப்படும் என தெரிவித்து சாலை போடும் பணியை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர். கிராம மக்களின் இந்த எதிர்ப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/