தொடர்ந்து மூவரும் இருசக்கர வாகனத்தின் மூலம் மந்தாரக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, சாலை பணிக்காக, தண்ணீர் எடுத்துச் செல்லும் டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. மேலும் டிராக்டரில் அதிக அளவில் சத்தம் எழுப்பியபடி பாட்டு ஓடியதாலும், டிராக்டர் ஓட்டுனர் செல்போனில் பேசி வந்ததாலும், டிராக்டரானது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பள்ளி குழந்தை யாழினி மற்றும் லிப்ட் கேட்டு வந்த மூதாட்டி கம்சலா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மேலும் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த ராஜா செல்வம் பலத்த காயங்களுடன், உயிருக்கு போராடிய நிலையில் அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
சாலையோர பணிக்காக தண்ணீர் எடுத்துச் செல்லும் டிராக்டரில் அதிகளவு சத்ததுடன் பாட்டு கேட்டுக்கொண்டே வேகமாக சென்றதாலும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதால் பள்ளி குழந்தை வயதான மூதாட்டி என இருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக சாலை பணி மேற்கொள்ளாத காரணத்தினால் அப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட தொடர் விபத்துக்கள் ஏற்பட்ட நிலையில் இன்று பள்ளிக்கு செல்லும் சிறு குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது, மேலும் மந்தாரக்குப்பம் பகுதியில் கரும்பு லோடு மற்றும் செங்கல் அடிப்பதற்காக டிராக்டர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது இந்த டாக்டர்களை இயக்கும் ஓட்டுநர்கள் டிராக்டர்களில் அதிக ஒளியை வைத்துக்கொண்டு பாடல்களை இசைத்தவாறு டிராக்டர்களை இயக்கி செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒளி ஓட்டுனர்களுக்கு கேட்காமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது, மேலும் நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறையினர்கள் அதிக ஒலி எழுப்பும் டிராக்டர்களையும் பாடல்களை அதிக ஒளியில் வைத்து டிராக்டர்களை இயக்கம் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.
No comments:
Post a Comment