மின்னழுத்தக்குறைபாட்டால் பல ஏக்கர் நெல்வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல். புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை மனு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2024

மின்னழுத்தக்குறைபாட்டால் பல ஏக்கர் நெல்வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல். புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க விவசாயிகள் கோரிக்கை மனு.


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்புத் அருகே சர்க்கரை ஆலை பின்புறம் பற்பலஏக்கர் சம்பா நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி வெள்ளாற்றுக் கரையோரம் உள்ள மணற்பாங்கான விவசாய நிலப் பகுதியாக இருப்பதால் தொடர்ச்சியாக வயல்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. அதனால் இப்பகுதியில் உள்ள மின் மோட்டார்கள் தொடர்ச்சியாக நெல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றன.

கடந்த ஓராண்டுக்கு மேலாக மின்னழுத்த குறைபாட்டால் போதிய மின்சாரம் கிடைப்பதில்லை. இதனால் மின்மோட்டார்கள் இயக்குவதில் பெரும் பிரச்சனை ஏற்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. சில நேரங்களில் மின் மோட்டார்களை இயக்க முடியாமலும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காமலும் போகிறது.


என்று விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். ஏற்கனவே இருக்கும் டிரான்ஸ்பார்மரிலிருந்து மின்சாரம் கிடைத்து வரும் நிலையில் அவற்றால் போதுமான மின்சாரத்தை மின் மோட்டார்களுக்கு தற்போது வழங்க முடியவில்லை. இதனால் தங்கள் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர்  அமைத்து பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்து பல மாதங்கள் ஆகிய  இதுவரை நடவடிக்கை இல்லை என விவசாயிகள் தங்கள்வேதனையை தெரிவிக்கின்றனர். தற்போது இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில் நெல் பயிரில் கதிர் வெளிவரும் முக்கிய கட்டத்தில் நெல்லில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்‌ அதனால் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுபுதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் மின்வாரியத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/