கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் வாரநாட்களில் சனிக்கிழமைகள் தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு கடலூர் மாவட்டம் அல்லது தமிழகத்தைச் உள்ள அனைத்து பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தங்கள் வளர்க்கு கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு வடலூர் ஆட்டு சந்தையில் ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் ஆடுகள் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர், ஆடுகள் ஒன்று சுமார் 6000 முதல் 17 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகை காலம் என்பதால் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் இதனால் அதிக அளவில் ஆடுகளை வாங்க ஆர்வத்துடன் வந்த எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment