கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் தூரிகை 2024 தொடக்க விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2024

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் தூரிகை 2024 தொடக்க விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தூரிகை 2024 காலண்டர் வெளியீட்டு விழா மற்றும் வங்கியின் வணிகம் 4000 கோடி உயர்ந்துள்ளதை சிறப்பிப்பதற்கான விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக தைத்திருநாளை வரவேற்கும் விதமாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுடன் புதுப்பானையில் பொங்கல் இட்டு வழிபட்டனர் பின்னர்  பள்ளி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கியின் 2024 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீட்டார், தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் நலன் கருதி மத்திய கூட்டுறவு வங்கியில் அரும்பு வங்கிக் கணக்கு என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாணவர்கள் தங்களால் முடிந்த சிறு சேமிப்புகளை சேமித்து வைக்க முடியும் இதனை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.


பின்னர் மத்திய கூட்டுறவு வங்கியின் கடலூர் மாவட்ட கிளைகளில் சிறப்பாக பணியாற்றிய வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு கேடயங்களை வழங்கி கௌரவித்தார், தொடர்ந்து சிறுவர்களுக்கு ஸ்பின்னிங் வீல் விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு கிடைத்த பரிசுகளை வழங்கினார், இறுதியில் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சார்பில் பொங்கல் பண்டிகையை ஊக்குவிக்கும் விதமாக வரைந்த பொங்கல் கோலங்களை மற்றும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட மாணவர்கள் வரைந்த ஓவியங்களை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்தபடி  வங்கி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/