கடலூர் பாதிரிக்குப்பம் ஸ்ரீ பாப்பாத்தி மாரியம்மன் ஆலயத்தில் அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு அபிஷேகத்தில் அம்மனுக்கு இளநீர், குங்குமம், பால், தயிர் அபிஷேகத்தூள் போன்றவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் அயோத்தி ஸ்ரீராமர் கும்பாபிஷேக நேரடி ஒளிபரப்பை பக்தர்களுக்கு ஒளிபரப்பு செய்தி நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட அனைவரும் பார்த்தனர். பின்னர் பொதுமக்களுக்கு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் பாரதிய ஜனதா கட்சி மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பி.ஹரிதாஸ் தலைமையில் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், காமராஜ், வினோத்குமார், ஊடகபிரிவு மாவட்ட துணைத்தலைவர் டாக்டர். தி. இராஜமச்சேந்திர சோழன்,ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment