கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற விழாவில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமை வகித்தார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.
இந்நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment