கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவலை அமைந்துள்ளது. இங்கு ஒன்றியப் பெருந்தலைவர் சி.என்.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழாவில கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏவுமான அருண்மொழித்தேவன் பங்கேற்று எம் ஜி ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்கள், பேருந்து பயணிகள் ஏழை எளியவர்கள் மற்றும்கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் கொடுத்தும், அன்னதானம் வழங்கியும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவை கோலாகலமாகக்கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் புவனகிரி மேற்கு ஒன்றிய அதிமுக துணைத்தலைவர் பிருத்திவி, புவனகிரி மேற்கு ஒன்றிய ஊராட்சி செயலர் ஜெயசீலன், சேத்தியாத்தோப்பு பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கே பி ஜி கார்த்திகேயன், சேத்தியாத்தோப்பு நகரச் செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன், தெய்வராஜகுரு,சாமிநாதன், சத்குரு, அண்ணா, பிரபாகரன், அருள் மற்றும் சில கழக நிர்வாகிகள் அதிமுக கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.

No comments:
Post a Comment