வடலூரில் மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணி மேற்கொண்டனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2024

வடலூரில் மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணி மேற்கொண்டனர்.


மாமூல் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக செங்கல்பட்டு அடுத்த வண்டலூரில் உள்ள கஸ்தூரி மெடிக்கல்ஸ் உரிமையாளர் வினோத் குமார் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவும் மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி கடலூர் மாவட்ட மருத்துவர்கள் சங்க அறிவுறுத்தலின்படி வடலூர் பகுதியில் உள்ள மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று கருப்பு பேட்ச் அணிந்தவாறு பணி மேற்கொண்டனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ரவுடிகளின் மாமூல் தொல்லையால் மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதாகவும் இதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு மேற்கொண்டு வியாபாரம் செய்து வரும் வணிகர்கள் மற்றும் மெடிக்கல் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணி மேற்கொள்ளும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி சட்ட நாடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் காவல்துறை அதற்கு அனுமதி மறுக்கவே இன்று ஒரு நாள் எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ச் அணிந்து பணி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

*/