கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2024

கருங்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.


வடலூர் அருகே உள்ள கருங்குழி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர், இந்நிலையில் பொங்கல் திருவிழா யொட்டி பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப் அனைவரையும் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஆர்.எம் சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் தொழிலதிபர் ராஜாமாரியப்பன் தலைமை தாங்கினார், இதில்ராஜமாரியப்பன் துணைவியார் சாந்தி ராஜமாரியப்பனும் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு, புதுபானையில் பொங்கல் வைத்தும், ஆசிரியைகள், பெற்றோர்களுடன், கும்மி அடித்து, தைத்திருநாளை வரவேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்தனர்.


பின்னர் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பானையில் பொங்கல் வைத்து அனைவரும் தமிழர் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதை நடித்துக் காட்டி அசத்தினர், மேலும் உழவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்கள் உழவர்கள் போல் வேடமிட்டு கையில் கலப்பைகளை ஏந்தியவாறு பாடல்களுக்கு நடனம் ஆடினார், இந்நிகழ்வில் வட்டாரகல்வி அலுவலர்கள், "சரஸ்வதி லட்சுமி, நந்தகுமார், ஆசிரியர் பயிற்றுனர் சரோஜினி, ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி,ஒன்றிய கவுன்சிலர் சிற்றரசு, 'மேலாண்மை குழு தலைவர் ராஜஸ்ரீ, பள்ளி ஆசிரியர்கள், மேரி புஷ்பலதா, ஆரோக்கியதாஸ் லயோனா கீதா மஞ்சித், மற்றும் மாணவர்கள் பெற்றோர்  திரளாக கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment

*/