முன்னதாக முதல் கால யாகசாலை வேள்வி தொடங்கி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெறுகிற (24/0 1/ 2024) தை மாதம் பத்தாம் தேதி காலை 6 மணியிலிருந்து இரண்டாம் கால பூஜையாக வஸோத்தராஹோமம், திரவியாஹூதி, ஸ்பரிசாஹூதி, நாடி சந்தானம், பிம்பசுத்தி, தத்துவார்ச்சனை, சர்மயஷாயம், ரக்ஷாபந்தனம், மஹாபூர்ணஹாதி, மஹாதீபாராதனை, கோபூஜை, கட யாத்திராதானம் ஆகியவைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று திருக்கூடலையாற்றூர் தேவஸ்தான நாதஸ்வர வித்வான் ராமமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர, மேள தாள வாத்தியங்களோடு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ துர்க்கை அம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி, ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பரதூர் மற்றும் பொன்னங்கோயில், சாத்தமங்கலம், ஒரத்தூர், வடப்பாக்கம், வெய்யளூர், சித்தலூர், வாக்கூர், ஓடாக்கநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்துச் சென்றனர்.
மேலும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்டகலசங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment