இதில் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழாவை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. அப்போது கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகளை விளக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது அப்போது, அங்கு குவிந்திருந்த சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு ஜோதி தரிசனத்தை இரு கை கூப்பி வணங்கினர்.
தொடர்ந்து காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, மற்றும் இரவு10 மணி ஆகிய ஆறு முறை ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது இதேபோல தொடர்ந்து நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட உள்ளது, ஜோதி தரிசன விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில், இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்ததனர்.
இந்த தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் 1500 க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறை சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு வள்ளலார் தெய்வ நிலையா வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பக்தர்களுக்கு சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment