தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் ஷயாமளா தேவி, அனைவரையும் வரவேற்றார், ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணை செயலாளர் கலைஞன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் கனகராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிவட்டாரத் தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார், ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் சசிகுமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டார செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் எட்வின் ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள், ஆர்ப்பாட்டத்தில், அனைத்து சங்க ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment