கடலூர் தெற்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட செயலாளர் உமாநாத் அறிவுறுத்தல் பேரில் 16வது நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக மாதா கோவிலில் இருந்து வடக்கு பாளையம் பேருந்து நிலையம் வரை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல் .ரவிச்சந்திரன் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.
அதனையடுத்து விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான கிராம மக்கள் ,கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோர்களுக்கு அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
ஒன்றிய கழக நிர்வாகி ராஜாராம் அனைவரையும் வரவேற்று பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஜெமினி, தீபா,விஜய பழனிவேல், முருகவேல், ரமேஷ்,புனித வேல்,ராஜதுரை, ராஜேந்திரன், சுந்தரம்,ராஜி, ராஜேஷ் குமார்,குரலரசன், செல்வராசு,ஆனந்த் ராஜன்,ஜெலின் மேரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment