கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பில் இயங்கி வரும் நகர அரிமா சங்கத்திற்கு தலைவர் பொறுப்பில் அரிமா சௌந்தர்ராஜன் இருந்து வருகிறார். நடப்பு 2023 - 2024ஆம் ஆண்டிற்கான அரிமா சங்க கவர்னராக அரிமா சாலை.கனகதரன் நியமிக்கப்படவுள்ளார்.
அரிமா சங்க கவர்னர் பொறுப்பில் நியமிக்கப்பட உள்ள அரிமா சங்க கவர்னர் சாலை கனகதரனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதன்படி இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க மாவட்ட த்தலைவர் டாக்டர் மணிமாறனும், சேத்தியாத்தோப்பு நகர அரிமா சங்கத் தலைவர் சௌந்தர்ராஜனும், முன்னாள் நகர அரிமா சங்கத் தலைவர் அன்பழகனும், முன்னாள் நகர அரிமா சங்கச்செயலாளர் அண்ணாமலையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அரிமா சங்க கவர்னருக்கு சால்வை அணிவித்து தங்களது ஆங்கில புத்தாண்டின் வாழ்த்துக்களையும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment