முன்னதாக தமிழறிஞர்கள் / எழுத்தாளர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு. தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. 01.02.2024 அன்று முற்பகல் 9.30 மணிக்கு பள்ளி மாணவர்களுக்கும் பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கும் மஞ்சக்குப்பம், அனைவருக்கும் கல்வி இயக்ககக் கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி/ கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.
கடலூர் மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்கள் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment