காருண்யா பைனான்ஸ் என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ள நோட்டீஸில் இரண்டு நபர்களின் கைப்பேசி எண்கள் அச்சிடப்பட்டு இருந்தது நோட்டீஸில் உள்ள செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்ட சிலர் லோன் குறித்து கேட்ட பொழுது எதிர் முனையில் பேசிய நபர் நீங்கள் இந்தியன் வங்கி கணக்கில் ரூபாய் 860 செலுத்திங்கள் உங்களின் வீடுகளுக்கு எங்களது முகவுகள் நேரடியாக வந்து உங்களுக்கு லோன் தொகையை கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் இதன் அடிப்படையில் பலர் இந்தியன் வங்கி கணக்கில் phone pay மற்றும் gpay மூலமாகவும் நேரடியாக சென்று பணம் செலுத்தியுள்ளனர்.
பணத்தை செலுத்தியதும் நோட்டீஸில் உள்ள நம்பருக்கு போன் செய்து பார்த்த பொதுமக்கள் போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர் ஒரு சில நாட்களுக்கு பிறகு மீண்டும் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டால் அது மீண்டும் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்கள் தங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.
- தே.தனுஷ் குறிஞ்சிப்பாடி செய்தியாளர் 8667557062
.jpg)
No comments:
Post a Comment