கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வானதிராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே சிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி உள்ள தெருவிளக்குகளால் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது இரவு நேரத்தில் முக்கிய தெருக்களின் வானதிராயபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்துடைப்பிற்காக அவசரகதியில் போடப்பட்ட தெருவிளக்குகள் அனைத்தும் பராமரிப்பின்றி காணப்படுகிறது இரவு நேரங்களில் தெருவிளக்கு இன்றி குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் தெரு விளக்கு எரியாமல் நகர் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மர்ம நபர்கள் சமுக விரோத செயல்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது பகுதியில் ஒரு சில இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் கட்டுமான பணிக்கு தேவையான பொருட்கள் கட்டுமான பணி நடைபெற்ற வரும் வீட்டினுல் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொருட்கள் அனைத்தும் அடிக்கடி திருடு போவதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது.
இரவு நேரத்தில் வீடுகளில் உள்ள மின்மோட்டார்கள் மற்றும் மின் மோட்டார் களுக்கு பயன்படுத்தப்படும் காப்பர் வயர்கள் மர்ம நபர்களால் அடிக்கடி திருடப்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர், இதுகுறித்து வானதிராயபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது வேதனை அளிக்கிறது என்று குமுறுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி பொதுமக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத ஊராட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment