தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் வடலூர் பார்வதிபுரம் சென்னையார் சத்திரத்தில் நடைபெற்றது P.ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் தலைவர் K.சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் கூட்டத்தில்,
- வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூபாய் 3000 தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்
- 25.1.2024 அன்று வடலூரில் நடைபெற உள்ள தைப்பூச விழாவிற்கு ஜோதி தரிசனம் காண வரும் பொது மக்களுக்கு போக்குவரத்து வசதி சுகாதாரமான குடிநீர்பொது கழிப்பறை மருத்துவ முகாம் ஆகியவை கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
- ஜோதி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க வெளிப்புறத்தில் டிஜிட்டல் திரையில் தரிசனம் காண ஐந்து இடங்களில் ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் R.கோமேதகவேல், P.சக்திவேல், S.அசோக், R.ராமாயி, V.ஜோதி, S.பாக்கியலட்சுமி, T.ரங்கநாதன் உள்ளிட்ட 120 மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment