கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளதுசாத்தமங்கலம் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக வெள்ளாறு செல்கிறது. இந்த ஆற்றங்கரைப்பகுதியோரம் இருக்கும் அடர்ந்த கருவேலங்காட்டுக்குள் சுமார்65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. கிராமத்தை ஒட்டியுள்ள முட்புதர்கள் மற்றும் கருவேலங்காட்டு வழியாக ஆற்றங்கரை ஓரம் சென்ற கிராமத்துக்காரர் யாரோ ஒருவர் அருகிலுள்ள ஒரத்தூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணைசெய்து வருகின்றனர்.
சடலமாக தொங்கிக் கொண்டிருந்த உடல் மோசமாகஅழுகி இருக்கும்நிலையை வைத்துப் பார்க்கும் போது சுமார்ஒரு வாரகாலத்தைத்தாண்டியிருக்கலாம் என்று அப்பகுதி கிராமத்தினர்கள் தெரிவிக்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட இந்த அழுகியசடலத்தால் அப்பகுதி பரபரப்பாகியுள்ளது.
No comments:
Post a Comment