சேலத்தில் நடைபெறும் 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2024

சேலத்தில் நடைபெறும் 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.


தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் வழிகாட்டுதலின்படி,  இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜனவரி 21 சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் திமுக இளைஞர்  அணி 2வது மாநில மாநாடு  மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக – இளைஞர் அணி சார்பில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சி, வட்டம், வார்டு வாரியாக 10000 (பத்தாயிரம்) இளைஞர்கள் கலந்துக் கொள்ளும்  பெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை விபரம் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின்படி, தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டம் செயலாக்கத்துறை அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளர் .உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஜனவரி 21 சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் திமுக இளைஞர்  அணி 2வது மாநில மாநாடு - மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சி, வட்டம், வார்டு வாரியாக 10000 (பத்தாயிரம்) இளைஞர்கள் கலந்துக் கொள்ளும்  பெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை,  ஒன்றியம் வாரியாக  காட்டுமன்னார்கோவில் கிழக்கு ஒன்றியம் 391 நபர்கள், காட்டுமன்னார்கோவில் மேற்கு ஒன்றியம் 413, குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியம் 449 நபர்கள், குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம் 851 நபர்கள், திருமுட்டம் கிழக்கு ஒன்றியம் 343 நபர்கள், திருமுட்டம் மேற்கு ஒன்றியம் 168 நபர்கள், திருமுட்டம் வடக்கு ஒன்றியம் 239 நபர்கள்,  கடலூர் கிழக்கு ஒன்றியம் 358 நபர்கள், கடலூர் மேற்கு ஒன்றியம் 260 நபர்கள், கடலூர் வடக்கு ஒன்றியம் 500 நபர்கள், கடலூர் தெற்கு ஒன்றியம் 250 நபர்கள், புவனகிரி கிழக்கு ஒன்றியம் 259 நபர்கள், புவனகிரி மேற்கு ஒன்றியம் 273 நபர்கள், கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியம் 258 நபர்கள், கீரப்பாளையம் மேற்கு ஒன்றியம் 206 நபர்கள், கம்மாபுரம் வடக்கு ஒன்றியம் 210 நபர்கள், கம்மாபுரம் தெற்கு ஒன்றியம் 180 நபர்கள், கம்மாபுரம் மத்திய ஒன்றியம் 150 நபர்கள், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றியம் 253 நபர்கள், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் 273 நபர்கள், எனவும் குமராட்சி கிழக்கு ஒன்றியம் 200 நபர்கள், குமராட்சி மேற்கு ஒன்றியம் 63 நபர்கள், குமராட்சி வடக்கு ஒன்றியம் 200 நபர்கள், குமராட்சி தெற்கு ஒன்றயிம் 119 நபர்கள் குமராட்சி மத்திய ஒன்றியம் 171 நபர்கள், கடலூர் மாநகரம் மாநகரம் பகுதி வாரியாக மஞ்சக்குப்பம பகுதி 202 நபர்கள், புதுப்பாளையம் பகுதி 165 நபர்கள், திருப்பாப்புலியூர் பகுதி 141 நபர்கள், துறைமுகம் பகுதி 238 நபர்கள், நகரம் வாரியாக சிதம்பரம் நகரம் 366 நபர்கள், வடலூர் நகரம் 360 நபர்கள், பேரூர் வாரியாக காட்டுமன்னார்கோவில் பேரூர் 233 நபர்கள், குறிஞ்சிப்பாடி பேரூர் 351 நபர்கள், திருமுட்டம் பேரூர் 119 நபர்கள், புவனகிரி பேரூர் 95 நபர்கள், சேத்தியாதோப்பு பேரூர் 105 நபர்கள், கெங்கைகொண்டான் பேரூர் 52 நபர்கள், பரங்கிப்பேட்டை பேரூர் 109 நபர்கள், கிள்ளை பேரூர் 248 நபர்கள், அண்ணாமலைநகர் பேரூர் 119 நபர்கள், லால்பேட்டை பேரூர் 60 நபர்கள் ஆக மொத்தம் 10000 (பத்தாயிரம்) இளைஞர்கள் மட்டும் கலந்துக் கொள்கின்றனர். மற்றும் இம்மாநாட்டில் கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தோழர்கள், இளைஞர்கள் அனைவரும் வருகின்ற 21.01.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில்  நடைபெறும் திமுக இளைஞர்  அணி 2வது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கம் மாநாட்டில் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*/