மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது வசந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான K.A. பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம். அகத்தியர் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம். பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த். கழக மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி

No comments:
Post a Comment