கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு நகர அதிமுக சார்பில் புரட்சித்தலைவர், பொன்மனச் செல்வர், டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எஸ்.ஆர். மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்ட பலருக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நகரத் துணைத் தலைவர் சம்பத், மாவட்ட பிரதிநிதி தெய்வ ராஜகுரு, பொருளாளர் ராமலிங்கம், அவைத்தலைவர் கோழி கோவிந்தசாமி, வார்டு செயலாளர்கள் ஸ்ரீதர்,ராமமூர்த்தி, லலிதா, பாலசுந்தரம், குணசேகரன், தங்கமணி மற்றும் சர்புதீன் மாரியப்பன், அண்ணா பிரபாகரன், வீரமணி, சங்கர், மணிமாறன், கணேசன், கோபால், ராமமூர்த்தி, சிவபாலன், குருதேவ் சிங், சுரேஷ், சிவக்குமார் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டது விழாவை சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment