கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலகப்பிரசித்திபெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இங்கு 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பொதுமக்கள் ஆன்மீக அன்பர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவர் பூவராகப்பெருமாளை வழிபாடு செய்தனர்.
இதில் யக்கிய வராக ஸ்ரீதேவி பூதேவி சமேத, வராகி அம்மனுக்கு பாலாபிஷேகம்,நெய், தேன், திணை, சந்தணம், குங்கும அபிஷேகம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு தீபாராதனை காட்டப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பல்வேறு பணிகளுக்கு செல்வோரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தாங்கள் நினைத்தது நிறைவேறவும் அனைவரும் நாடும் வீடும்நலம் பெறவும், நல்வாழ்வு பெற்றிடவும் மனதார வேண்டி ஸ்ரீ பூவராகப் பெருமாளை மனம் உருகிவணங்கி வழிபட்டுச் சென்றனர்.
No comments:
Post a Comment