இந்தத் தகுதித் தேர்வுக்கு குழந்தைகள் நல மருத்துவர் தீபா சுஜின் தலைமை தாங்கினார். கராத்தே பயிற்சிப் பள்ளி நிறுவனர் சென்சாய் வி. ரெங்கநாதன் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பி. சத்யராஜ் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான பயிற்சி முகாமை எஸ் டி எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு சாமுவேல் சுஜின் துவக்கி வைத்தார். இந்த தகுதித் தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெற்றனர்.
இத்தேர்வில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளாக் பெல்ட் பெறுவதற்கு தகுதி பெற்றனர். வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மாநில அளவிலான கராத்தேபோட்டியில் கலந்துகொண்டு பிளாக் பெல்ட் சான்றிதழ் பெறுவதற்கு முழுத் தகுதி பெற்றனர். இந்த தகுதித் தேர்வில் மாணவர்களுக்கு கட்டா பயிற்சி மற்றும் ஷாய் பிரிவுகள், கராத்தே வீரர்களின் தனித் திறன் பயிற்சி மற்றும் பல்வேறு சுற்றுகளில் மாணவர்களுடைய தகுதி நிர்ணயிக்கப்பட்டது. தகுதி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சாமுவேல் சுஜின் சென்சாய்.வி. ரெங்கநாதன், கராத்தே பயிற்சியாளர் ரவிக்குமார், இளவரசன், பிரத்தியூனன், ராஜ்கிரண், நந்தினி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment