கடலூர் மாவட்டம் வடலூரில் இராமலிங்க அடிகளார் அவர்களின் 153வது வள்ளல் தைப்பூச திருநாளை முன்னிட்டு தமிழக குரல் இணைய வழி செய்தி நிறுவனர் வினோத்குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட செய்தியாளர் வீ. சக்திவேல் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதி செய்தியாளர் தனுஷ் ஆகியோர் முன்னிலையில் நெய்வேலி பகுதி நிருபர் சமூக ஆர்வலர் திருமதி.வினோதினி அவர்களின் தலைமையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடலூர் ரோட்டரி உதவி ஆளுநர் வி. புருசோத்தமன் தலைவர் மகாராஜன் பொருளாளர் உன்னிகிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட செய்தியாளர் சத்தியநாதன், ஒரத்தூர் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment