இந்நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர், பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் குடியரசு தினமான இன்று நெய்வேலி வட்டம் 8 பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே தங்களது குடும்பத்துடன் கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி காவல் ஆய்வாளர் சாகுல் அமீது அவர்கள் நீங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று உள்ளீர்கள் ஆனால் அதனை மீறி கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வதால், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்துள்ளது என்று தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் தொழிலாளர்களுக்கும் ஆய்வாளருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் காவல்துறையின் கோரிக்கை ஏற்று தொழிலாளர்கள் கையில் வைத்திருந்த கருப்பு கொடியை அகற்றி பதாகைகளை மட்டும் உயர்த்தியபடி நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெய்வேலி என்எல்சி இந்தியா நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இறுதியில் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த தவறிய நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு எதிராக விரைவில் வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்த கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment