இதில் நெய்வேலி நகர் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள், வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பிரான்சிஸ் மற்றும் நெய்வேலி போக்குவரத்து கழக கிளை மேலாளர் R.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காவல்துறை சார்பில் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது உதவி ஆய்வாளர் கோபால், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஞானசேகரன், தலைமை காவலர் ராஜவேல் , முத்தையன் , ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நிலை காவலர்கள் S.பாலச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார் தொடர்ந்து பேசிய நெய்வேலி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் நெய்வேலி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவில் மாணவர்களை ஏற்ற வேண்டும் அதிவேகமாக இயக்கக் கூடாது ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது தகுந்த சீருடை அணிந்து வாகனம் இயக்க வேண்டும் என்றும் சாலை விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விபத்து ஏற்படுத்தாமல் இயக்கும் சிறந்த ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் சாகுல் அமீது அவர்கள் பேசுகையில் பள்ளி வாகனங்கள் வேகமாக செல்வதாக அடிக்கடி புகார்கள் வருகிறது எனவும் மெதுவாக பள்ளி வாகனங்கள் இயக்க வேண்டும் என்றும் நெய்வேலி நகரை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் மீது புதிய மோட்டார் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விபத்தினை ஏற்படுத்தும் ஓட்டுநரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் புதிய மோட்டார் வாகன சட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து அறிவுரை வழங்கினார் தொடர்ந்து நெய்வேலி போக்குவரத்து கிளை மேலாளர் அவர்கள் பேசுகையில் விபத்தினால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் நிலை குறித்து உருக்கமாக பேசினார்.
அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் தலைவர் டாக்டர் ஆரோக்கியராஜ் அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு சம்பந்தமான நோட்டீசுகளை வழங்கினார் பின்னர் நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு பேருந்து திணை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இறுதியில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் பொதுச் செயலாளர் k.செந்தில் நன்றி உரை வழங்கினார்.
- வீ.வினோதினி நெய்வேலி செய்தியாளர்.
No comments:
Post a Comment