கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் நெய்வேலி தொகுதி உட்பட்ட வானதிராயபுரம் ஊராட்சி தென்குத்துபுதுநகர், கல்லகுழி,RK சிட்டி ஆகிய பகுதியில் முறையான நோய் தடுப்பு நடவடிக்கை இல்லாததால் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சுமார் 10க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்குத்து புதுநகர் கல்லுகுழி RK சிட்டி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு அடிப்படை வசதிகளான கழிவுநீர் வடிகால் மழை நீர் வடிகால் மற்றும் சுகாதாரமான குடிநீர் ஊராட்சி நிர்வாகத்தால் விநியோகிக்கப்படாமல் உள்ளதால் அதிக அளவில் நோய் தொற்று பரவியுள்ள அவல நிலை தொடர்கிறது.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையிலே தேங்கி கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகமாகி டெங்கு காய்ச்சல் அதிக அளவில் இப்பகுதியில் பரவுள்ளவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர், மேலும் ஆர் கே சிட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகள் அருகாமையில் மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகரிப்பதோடு நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது இதுகுறித்து பலமுறை வானதிராயபுரம் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் இதுவரை கண்டு கொள்ளவில்லை எனவும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் கல்லுகுழி மற்றும் RK சிட்டி பகுதியில் மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டி வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் வடலூர் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கல்லுகுழி அருகே கொட்டப்படுவதால் அவை மழை நீருடன் கலந்து துர்நாற்றம் வீசி வருவதோடு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீரிலும் கலந்து நோய் தொற்று அதிக அளவில் இப்பகுதியில் உண்டாக்குவதாக கூறுகின்றனர். பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் தங்கள் பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்று வரை செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment