கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் பல்வேறு இடங்களில் கிராமங்கள் தோறும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக டிஜிட்டல் கேபிள்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கேபிள்கள் மின் கம்பிகளைப் போல மின் கம்பங்கள் அமைத்து அதன் வழியாக அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் கேபிள்கள் சரியான முறையில் அமைக்கப்படாமல் பல்வேறு இடங்களில் தாழ்வாகவும், அறுந்தும் தொங்கிக் கொண்டுள்ளன. மேலும் பல இடங்களில் தரையிலும், போக்குவரத்து சாலையிலும் கிடக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூராகவும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதத்திலும் இந்த டிஜிட்டல் கேபிள்கள் இருந்து வருகிறஇந்த கேபிள்களை சரியான அளவில் பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் சென்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள்,சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:
Post a Comment