பின்னர் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் பாச்சாரப்பாளையம் மேல தெரு பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(24)மற்றும் மீனாட்சி பேட்டை சிங்கபுரி வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற தமிழரசன் (26) எனவும் இவர்கள் கஞ்சா பொட்டலங்களை கு.நெல்லிகுப்பம் ஏரி கரை அருகே மறைத்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். குறிஞ்சிப்பாடி பகுதியில் வாலிபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment