கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அகரம் ரயில் நிலையம் அருகே பிரதி வாரம் வியாழக்கிழமை மாலை நேர வாரா சந்தை கூடுகிற நிலையில் இந்த வார சந்தை பரங்கிப்பேட்டையில் இருந்து சிதம்பரம் செல்லக்கூடிய மிக முக்கியமான சாலையில் கூடுவதால் அன்றைய தினம் மாலை நேரங்களில் சாலையில் பேருந்துகள்.ஆம்புலன்ஸ் போன்ற வாகனம் செல்வதற்கு மிகவும் இடையூறாக இருந்து வந்த நிலையில் இதை கருத்தில் கொண்ட வர்த்தக தொழில் சங்கம் மண்டல தலைவர் D.சண்முகம் அவர்கள் எடுத்த முயற்சியினால் ரயில்வே துறை அதிகாரிகள் அனுமதியுடன் பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் வளாகத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டு பரங்கிப்பேட்டை வர்த்தகத் தொழில் சங்கம் தலைவரும் திமுக கவுன்சிலருமான க.ஆனந்தன் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பினராக கலந்து கொண்ட வர்த்தக தொழில் சங்கம் மண்டல தலைவர் D. சண்முகம் அவர்கள் மூலம் சங்கம் கொடியினை ஏற்றி வைத்த பிறகு இடம் மாற்றம் செய்யப்பட்ட வார சந்தையினை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
மேலும் பரங்கிப்பேட்டை பொது மக்களின் பல நாள் கோரிக்கையான ரயில் பயணிகள் வாகனம் நிறுத்துமிடம். கட்டான பொது கழிவறைகள் போன்ற சகல வசதிகளும் இந்நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது இதில் மாவட்ட செயலாளர் V. வீரப்பன்.பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர். வர்த்தக தொழில் சங்கம் பொதுச் செயலாளர் G.M.சாலிஹ் மரைக்காயர். மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ். செயலாளர் அபுல் உசேன். இணைச் செயலாளர் கவிமதி. நகர மகளிர் அணி காமிலா கலீல்.வர்த்தக தொழில் சங்கம் நிர்வாகிகள்.திமுக நகர செயலாளர் முனவர் உசேன். பேரூராட்சி மன்ற திமுக வார்டு உறுப்பினர்கள். அதிமுக நிர்வாகிகள். பாமக நிர்வாகிகள். விசிக நிர்வாகிகள். திமுக.கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் தா.கலீல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment