புவனகிரிப் பகுதியில்பருவநிலை மாற்றத்தால் நெற்பயிரில் கடுமையான பூச்சித்தாக்குதல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 December 2023

புவனகிரிப் பகுதியில்பருவநிலை மாற்றத்தால் நெற்பயிரில் கடுமையான பூச்சித்தாக்குதல்


கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாதோப்பு,வளைமாதேவி, கீரப்பாளையம் ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தற்போது  சம்பாநெல் சாகுபடி செய்துள்ளனர். மழைக்குப் பிந்தைய பயிர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முயன்ற விவசாயிகள் நெற்பயிரில் மழைக்குப் பிறகான பருவநிலை மாற்றத்தால் இலைச்சுருட்டுப்புழு, புகையான் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் ஏற்பட்டு நெல் பயிரின் இலைகள் வெண்மை நிறமாகவும் கருகியும் வருகின்றன. 

இந்த வகை பூச்சிகள் விவசாயிகளை வேதனையடைய வைத்துள்ளது. ஒவ்வொரு சம்பா சாகுபடி நெல் வயலிலும் பூச்சி தாக்குதலுக்காக தொடர்ச்சியாக மருந்தடித்த நிலையிலும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மழைக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் மோசமாக நெற்பயிரை தாக்கி வருவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற ஒரு கடுமையான பூச்சித்தாக்குதலை பார்க்கவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 


வேளாண்மை துறை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தால் அவர்கள்  வேறு ஒரு மருந்தைத் தெளிக்கச் சொல்லி அறிவுறுத்துகின்றனர். அந்த மருந்தை பூச்சி மருந்து கடைகளில் கேட்டால் அது அங்கே கிடைப்பதில்லை. கடைக்காரர்கள் அவர்களாகவே ஏதோ ஒரு மருந்தை பரிந்துரை செய்து கொடுக்க விவசாயிகள் அதை வயல்களில்  தெளித்து வருகிறார்கள். இருந்தாலும் பூச்சித்தாக்குதல் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகத் தெரியவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். 


தற்போது பயிர்களில் ஏற்பட்டுள்ள பூச்சித் தாக்குதலால் இந்த ஆண்டு சம்பா மகசூல் இழப்பு அதிகமாக ஏற்படும் என விவசாயிகள் தங்கள் மன வேதனையைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/